தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு தடையை மீறி மறியல் செய்ய முயன்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் 10 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். 100 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமச்சீர் கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரியும், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு மறியல் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து மாணவர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செல்வா, செயலர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் 10 பெண்கள் உள்பட 100 மாணவர்கள் தடையை மீறி தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையில் ஊர்வலமாக வந்த மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி மாணவர்கள் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதில் 10 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஒரு மாணவருடைய காது அறுந்து விழுந்தது. காவல்துறையினர் நடத்திய தடியடியில் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. காயம் அடைந்தவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மறியல் செய்ய முயன்ற 100 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
2 பேரு சொன்னாங்க:
என்னிடம் இது தொடர்பான புகைப்படங்கள் இருக்கின்றன.. தேவை எனில் தொடர்புகொள்ளவும்.
balabharathi@balabharathi.net
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment