டிவி- சேனலில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், தனது சேனலில் ஒளிபரப்பாகும் கோமாளி நம்பர்-ஒன் என்ற நிகழ்ச்சிகாக ஹேமமாலினியை இரண்டு முறை ஏமாற்றுகிறார். மூன்றாவது முறையாக ஹேமமாலினியின் திருமணத்திலும் போலி மாப்பிள்ளையை செட்டப் செய்து கோமாளியாக்குகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் ஹேமமாலினியின் தந்தை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகுகிறார். தன்னால் ஏற்பட்ட இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டதுடன், ஹேமமாலினியை மணந்தும் கொள்கிறார் ஸ்ரீகாந்த். (காதல் காட்சிகள் இன்றி காதலியை கைப்பிடிக்கிறார்)
இதற்கிடையில், சேனலின் முதலாளியான நாசரின் மனைவியாக வருகிறார் நமீதா. நமீதாவை பார்த்து அதிர்ச்சியாகும் ஸ்ரீகாந்த், நமீதாவால் பலமுறை அவமானப்படுத்தப்படுகிறார். (ஏன் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக்) ஐந்து வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்தும், நமீதாவும் மலேஷியாவில் சந்தித்து கொள்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே நமீதாவிடம் சருக்கிய ஸ்ரீகாந்த், நமீதாவை காதலிக்க தொடங்குகிறார்.
நமீதா ஸ்ரீகாந்துடன் அவருடைய பணத்தையும் காதலிக்கிறார். பணத்திற்காக எதையும் செய்யும் நமீதாவின் சுயரூபம் அறியும் ஸ்ரீகாந்த், அவரை விட்டு பிரிகிறார். இப்படி பிரிந்த தனது முன்னால் காதலி, தனது முதலாளியின் மனைவி என்பதால் அவமானங்களை பொறுத்துக் கொண்டு அவரின் கீழ் பணிபுரிந்து வரும் ஸ்ரீகாந்தை தாம் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அழைக்கிறார் நமீதா. அங்கு வரும் ஸ்ரீகாந்திடம் தனது காதல் நினைவுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கும் நமீதாவிற்கு ' நோ ' சொல்லி நோஸ்கட் கொடுக்கிறார். கோபம் கொள்ளும் நமீதா, ஸ்ரீகாந்த் தம்மை கற்பழிக்க முயற்சித்தார் என்று தமது கணவர் நாசரிடம் கூறி, ஸ்ரீகாந்தை வேலையைவிட்டே தூக்குகிறார்.
ஸ்ரீகாந்த் தான் நிரபராதி என்றும், தனது வேலையை தமக்கு திருப்பி தரவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இதற்கிடையில், நமீதா-ஸ்ரீகாந்த் பேசிக்கொண்ட வீடியோவை வைத்திருக்கும் ரகசியா கொலை செய்யப்படுகிறார். இக்கொலை பழியும் ஸ்ரீகாந்தின் மேல் விழுகிறது. இதிலிருந்து எப்படி விடுபட்டார் என்பதே இறுதி காட்சி.
நமீதா, ஹேமமாலினி, ரகசியா மூன்று பேரையும் நீச்சல் உடையில் காண்பிப்பதாக இயக்குனர் வேண்டிக்கொண்டாரோ என்னவோ. ஹேமமாலினி நமீதாவிற்கு போட்டியோ என்ற அளவிற்கு அசத்தியிருக்கிறார். ஆனால் நமீதா வந்தவுடன், நமீதா மட்டும் போதும் என்ற அவரை ஒதுக்கிவிட்டார் இயக்குனர். நமீதா தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கணக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆறடி ஆல்கஹாலாக இருந்தாலும் நமீதாவினால் எந்த போதையும் ஏற்படவில்லை.
இந்திர விழாவில் இந்திரனுக்கு வேலை கொடுக்காமல், நாயகிகளின் அடாவடியில் அமைதியாக வந்து போகிறார் ஸ்ரீகாந்த். நாசர் ஜான் குமாரமங்கலம் என்ற கதாபாத்திரத்தில், அவர் போடும் லாங்கோட்டின் அளவுக்கு கூட அவர் வரும் காட்சிகள் இல்லை. விவேக் காமெடி என்ற பெயரில் கடுப்பேத்துகிறார். பிறகு ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன் ஆகியோரின் கூட்டணியில் வரும் நீதிமன்ற காட்சிகள் ஓரளவு சிரிக்க வைக்கின்றன.
கவர்ச்சி ப்ளஸ் காமெடி என்று கணக்குப் போட்டு கதை எழுதியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்வர். நமீதாவையே நம்பியிருக்கும் இயக்குனர், முதல் பாதியில் கவர்ச்சிக்கு முக்கியத்துவமும், இரண்டாம் பாதியில் காமெடிக்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார். ஜெயித்தது என்னவோ கவர்ச்சிதான். இந்திரனுக்காக இல்லை என்றாலும், ரம்பை, ஊர்வசி, மேனகை இவர்களுக்காக இவ்விழாவில் மக்கள் கலந்து கொள்வார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
5 பேரு சொன்னாங்க:
அப்படியா அப்ப படம் ஓடும்.
நல்ல விமர்சனம்.. ஆனா நமிதா படம் போடாததை வண்மையாக(எழுத்து பிழை இல்லை கண்டனத்தின் தீவிரத்தை காட்டவே)கண்டிக்கிறோம்..
"ஜெயித்தது என்னவோ கவர்ச்சிதான்."
என்று நீங்கள் கூறியதால் பார்ப்பதைப் பற்றி மீண்டும் யோசிக்க வேண்டியுள்ளது.
நன்றி அக்பர் ;-)
நமீதா படம் அவசியமா சார்?
ஜமாயுங்க எம்.கே.எம்!
ஆரம்பத்தில் நமிதா மீது கிக் இருந்தது உண்மை தான்.
சத்தியமாய் இப்போது போரடித்து கொஞ்சம் பயமாக கூட இருக்கிறது.
மற்றபடி தெளிவான விமர்சனம்.
பிரபாகர்...
Post a Comment