மக்களவை துணைத் தலைவர் பதவிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினத்தைச் சேர்ந்த கரிய முண்டாவை தமது கட்சி வேட்பாளராக நிறுத்த பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தலைவர் பதவிக்கு மீரா குமார் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மரபுப்படி துணைத் தலைவர் பதவிக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஒருவரை நிறுத்துமாறு பாரதிய ஜனதாவிடம் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து பா.ஜனதா கட்சியின் மத்திய நாடாளுமன்ற குழு இன்று காலை டெல்லியில் கூடி, வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசித்தது.
இந்த கூட்ட முடிவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்களவையில் 6 முறை உறுப்பினராக பதவி வகிக்கும் கரியமுண்டாவை துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
Tuesday, June 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment