சென்னை பனையூரில் சமீபத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தனக்கு தெரிந்த விவரங்களை நேரில் வந்து தெரிவிக்குமாறு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தாக்கீது அனுப்பியுள்ளனர்.
பனையூர் தம்பதியினர் கொலையில் உண்மையான விசாரணை நடைபெறாது என்றும், வழக்கு விசாரணை நிலையிலேயே குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்றும் விஜயகாந்த் குற்றம்சாற்றியிருந்தார்.
மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தாலும் அதையும் மக்கள் நம்பத்தயாராக இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவிடப்படுமா? புலன்விசாரணை நியாயமாக நடைபெறுமா? உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? அவர்கள் ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
முறையாக குற்றம்சாற்றப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? அவர்களுக்கு தக்க ஆதாரங்கள் மூலம் காவல்துறை தண்டனையை பெற்றுத்தர முன்வருமா? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியிருந்தார் விஜயகாந்த்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், இது தொடர்பாக விஜயகாந்துக்கு தாக்கீது அனுப்பியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக தெரிந்த தகவல்களை நேரில் வந்து தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கூறியிருப்பதாக தெரிகிறது.
சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரிடமிருந்து சம்மன் வந்திருப்பதையடுத்து, விஜயகாந்த் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்கீதுக்கு பதிலளிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 பேரு சொன்னாங்க:
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
Post a Comment