பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது மக்களுக்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை பின்பற்றி பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுப்போம்.
தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளை சுத்தமான நீரில் குளியுங்கள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.
வெளியில் சென்று விட்டு வந்ததும் கை, கால், முகம், கழுத்துப் பகுதிகளை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவுங்கள். இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கம் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.
மது அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் பன்றி காய்ச்சல் போன்ற நோய்க்கிருமிகள் உடலுக்குள் எளிதாக ஊடுருவும் என்பதால் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.
மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.
இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவற்றை தொடுவதையும் தவிருங்கள்.உடல் நலக் குறைவைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள்.
குழந்தைகளை வெளியில் கொண்டு செல்வதைத் தவிருங்கள். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளைத் தூக்காதீர்கள். உடனடியாக உடலை சுத்தம் செய்த பின்னரே அடுத்த வேலையைத் துவக்குங்கள். இருமல், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.
சாதாரண காய்ச்சல் என்று நீங்களாக எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடாதீர்கள். காய்ச்சல் வந்தவரின் அருகில் செல்வதை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகளையும் அனுப்ப வேண்டாம்.
வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை சென்று பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
Tuesday, August 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 பேரு சொன்னாங்க:
பயனுள்ள பதிவு அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விசயங்கள்
வாழ்த்துக்கள், நன்றி.
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே
மிக முக்கியமான பதிவு..எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
Thanks Venkat, Kathir & Amudha.
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ருதி கவடெ என்னும் சிறுமி பன்றிக் காய்ச்சல் காரணமாக புணேயில் உள்ள சாசூன் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
இவருடன் சேர்த்து புணேயில் மட்டும் இதுவரை 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் வதேதராவில் 7 வயது சிறுமியும், மகாராஷ்டிராவில் தாணே பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண்ணும் இன்று பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.
நல்ல பயனுள்ள பதிவு. ஆனா குளிக்கணும், தண்ணி அடிக்ககூடாதுன்னு சொன்னா எப்படிங்க இருக்கிறது????
:-))))))))
Post a Comment