Tuesday, March 16, 2010

உள்ளூர பயம்!

என் விடலைப்பருவத்தில்
வெறித்துப்பார்த்து சிரித்த
வில்லங்க ஆண்களை
விவரமறியாமல் விட்டுவைத்தேன்
உள்ளூர பயம்!

பருவம் வந்தபின்
பள்ளி-கல்லூரி போகவர
பாதகர்களென்னை பார்வையிலேயே
அளவெடுக்க, கண்டும் காணாமலும்
விட்டேன், உள்ளூர பயம்!

எப்படியெல்லாமோ நூல்விட்டு
யாரையெல்லாமோ தூதனுப்பிய
கலிகால காந்தர்வர்கள்! - காதலை
எதிர்க்கவும் ஏற்கவுமியலாமல்
உற்றார் உறவிடமும் சொல்லாமல்
புதைந்தவை, உள்ளூர பயம்!

இரவு நேர பேருந்து
பயணத்தின் அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...
காமமும் கோபமும் ஒருசேர கிளர்ந்தெழ,
வருடலின் சுகம் மீறியும்
பளாரென அறைகிறேன்...
என் வருகையை எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்
கணவன் முகம் நினைத்து...

3 பேரு சொன்னாங்க:

said...

இரவு நேர பேருந்து
பயணத்தின் அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...
காமமும் கோபமும் ஒருசேர கிளர்ந்தெழ,
வருடலின் சுகம் மீறியும்
பளாரென அறைகிறேன்...
என் வருகையை எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்
கணவன் முகம் நினைத்து... //

இது யார் எழுதிய கவிதை?

said...

நல்ல பதிவு

said...

அடுத்தது எப்போ? உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க