Sunday, May 31, 2009

வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாமே : வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னவை:
வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது எச்ன்று வலியுறுத்துகிறோம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது. அதை நிபுணர்கள் நிரூபித்து உள்ளனர். அதனால்தான் அமெரிக்கா, ஜப்பான் போன்ற அறிவியல் வளர்ச்சி பெற்ற நாடுகளில்கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அவர்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவது இல்லை.

வாக்குச்சீட்டு முறையில் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில்தான் தேர்தலை நடத்துகிறார்கள். ஆக, முறைகேடூக்கு வாய்ப்பு இருப்பதால் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற கருத்து வலிமை பெற்று வருகிறது. எதிர்காலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் `புரோகிராம்' செய்யும்போதே, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் எந்த பொத்தானை அழுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்குகள் பதிவாகிறமாதிரி செய்ய முடியும்.
அதேபோல் ஒரு சின்னத்தில் பதிவு செய்ய பொத்தானை அழுத்தினால் வேறொரு சின்னத்துக்கு அது பதிவாகும் அளவிலும், அல்லது வாக்குகள் பதிவாகாத நிலையிலும் கூட `புரோகிராம்' செய்ய முடியும் என்று நிபுணர்கள் நிரூபித்து உள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐ.நா.சபை வாக்கெடுப்பு நடத்தியதில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இருப்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. வாக்களித்தது மட்டுமின்றி, இலங்கைக்கு சாதகமாக இந்தியாவும், சீனாவும் பிற நாடுகளின் ஆதரவையும் திரட்ட மிக தீவிரமாக முயற்சி செய்து இருக்கின்றன. இலங்கையில் 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இப்போதும் குற்றுயிரும், குலையுயிருமாக படுகாயத்துடன் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மனித பேரழிவு நடைபெறும் வேளையில் அந்த போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுப்பவேண்டிய இந்திய அரசு மாறாக, இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டது என வைகோ கூறினார்.

0 பேரு சொன்னாங்க: