Sunday, July 27, 2008

சொல்ல வந்ததென்னவோ

வாழ்த்து அட்டைக் கடையில்
மணிக்கணக்காய்!

ஏதும் பொருத்தாமாயில்லை,
என்னை உனக்கு சொல்ல!!

உனக்குப் பிடித்ததாய்
சொன்ன பொம்மைக் கடையிலும்!!

அடிக்கடி நாம் செல்லும்
துணி மற்றும் வளையல் கடையிலும்!!

சொல்ல வந்ததென்னவோ - என்
காதல் மட்டும்தான்,
அதோ! நீ கேட்டது!!

"நம் மருமகனுக்கு
மாணிக்க கல்வைத்த
மோதிரம் வேண்டுமாம்!"

என் கடைசி சம்பளத்தில்......

Monday, July 21, 2008

காத்திருப்பு

விடிந்த நேரத்தின்
விடியாத அறைக்குள்
தலையணை முகம்புதைத்து
தவித்த நாள் எத்தனையோ!

அடுத்த அறை ஜன்னல்
அடிக்கடி திறந்துப் பார்ப்பேன் - வெளியில்
நீ நிற்பாயோவென்று!

முன்பெல்லாம் விட
நிறைய நேரம் கண்ணாடியில் - என
அம்மா திட்டுகிறாள்!

அப்பா சிரிப்பதன் அர்த்தம்,
சிலநேரம் அன்பாகவும்!
பலநேரம் அவஸ்தையாகவும்!!

எல்லாம் உன்னாலென்று
எனக்கு மட்டுமே தெரியும்!
என்ன நடக்குமோ,
உறுதியில்லை உள்ளத்தில்!

இன்னும் எத்தனை நாட்கள்?
த்பால்காரர் என் வாசல் நிற்க!!

வெளிநாட்டுப் படிப்பென்றால் சும்மாவா?

நம்(பிக்)கை கோர்க்க!

ஊருணியாய் உலர்ந்து
வெடித்திருக்கும் மனது

உடைந்துபோன நிலவாய்
தேய்ந்துவரும் எதிர்பார்ப்பு

மீண்டும் நம்பிக்கையாய்
சமீப மின்னஞ்சல்கள்
மற்றும் பல

மலரும் நினைவுகளாய் - நாம்
வந்துபோகும் வழிகள் கூட
மெல்லிய திரை போடும் விழிகள்!

யார் யாரோ நகைத்த
வடுக்களாய் அகமும் புறமும்

இன்றும் சில வாங்கினேன்
என்னைப் போலவே - இவைகளும்
காத்திருக்கும் நம்(பிக்)கை கோர்க்க!